காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு

by Staff / 17-07-2023 05:24:37pm
காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற் றில் திறக்கப்படும் தண்ணீரானது, வழியில் உள்ள செக்கா னூர் கதவணை, நெருஞ்சிப்பேட்டை கதவணை பகுதிகளில் தேக்கப்பட்டு அங்குள்ள நீர்மின் உற்பத்தி நிலையங்கள் வழி யாக கோனேரிப்பட்டி கதவணை பகுதியில் தேக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் கோனேரிப்பட்டி கதவணை நீர்த்தேக்க பகுதிகளான சிலுவம்பாளையம், கோட்டைமேடு, நெடுங்குளம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

இப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையங்கள் வழியாக மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நடை பெற்று வரும் நிலையில் திடீரென காவிரி ஆற்றல் அதிக அளவிலான மீன்கள் செத்து மிதப்பது அப்பகுதி மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.இப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் செயல்பட்டு வரும் சில தனியார் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதாலும், நள்ளிரவு நேரங்களில் மாவட்டத்தின் வேறு பகுதியில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் ரசாயன கழிவு நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதாலும் ஆற்று நீர் மாசு ஏற்பட்டு மீன்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via