சவரனுக்கு ரூ.3,760 உயர்ந்த தங்கம்.. அட்சய திருதியைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

by Editor / 29-04-2025 04:02:36pm
சவரனுக்கு ரூ.3,760 உயர்ந்த தங்கம்.. அட்சய திருதியைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.3,760 உயர்ந்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.8,510-க்கும், சவரன் ரூ68,080-க்கும் விற்பனையானது. இந்நிலையில், கடந்த 28 நாள்களில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் இன்று (ஏப்.29) சவரன் ரூ.71,840-ஆக விற்பனையாகிறது. நாளை (ஏப்.30) அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என பொருளாதார வல்லுநர்களும் தங்க வியாபாரிகளும் கணித்துள்ளனர்.
 

 

Tags :

Share via