கூல் லிப் விற்பனை வழக்கு.. நீதிமன்றத்தில் விசாரணை

by Staff / 14-10-2024 04:03:02pm
கூல் லிப் விற்பனை வழக்கு.. நீதிமன்றத்தில் விசாரணை

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களுக்கு தடை கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூல் லிப் மட்டுமல்ல, அது போல பலவகையான போதைப் பொருட்கள் உள்ளன. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என குட்கா நிறுவன தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதற்கு அவையெல்லாம் பள்ளி, கல்லூரிக்கு வெளியே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறினார்.

 

Tags :

Share via