குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

by Editor / 10-06-2024 10:07:20am
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளின் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் தடையானது நேற்று முழுவதும் நீடித்த நிலையில் இன்று காலை அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பணிகளைக் குறிக்க போலீசார் அனுமதித்துள்ளனர். 

தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள நிலையில் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share via

More stories

Logo