இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 309வது ஜெயந்தி விழா; 1300 போலீசார் குவிப்பு.

by Editor / 01-09-2024 09:41:04am
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 309வது ஜெயந்தி விழா; 1300 போலீசார் குவிப்பு.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித் தேவனின் 309வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 8 சோதனை சாவடிகள் அமைத்து நெல்லை சரக டி.ஐ.ஜி.மூர்த்தி தலைமையில்,மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாசன் தலைமையில் 4 ஏடிஎஸ்பி, 15 டிஎஸ்பிக்கள்,59 ஆய்வாளர்கள்,150 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1300 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

புலித்தேவர் மாவீரன் பூலித்தேவர் 01/09/1715 அன்று சித்திரபுலி தேவர் அவர்களுக்கு மகனாக பிறந்தார் காந்தர்வ பூலிதேவர் அவருடைய வீரம்,போர் பயிற்சிகளை கண்டு அவரை 12 வயதில் அரியணை ஏற்றினார்

ஆற்காடு நவாப்புக்கு அளித்துவந்த வரியை கட்ட முடியாது என பாளையக்காரர்கள் அறிவித்தனர்,இதனால் ஆத்திரமுற்ற நவாப் ஆங்கிலேயன் உதவியை நாடினான் சில பாளையக்காரர்கள் ஆங்கிலேயனுக்கு கப்பம் கட்டினார்கள்.ஆங்கிலேய தளபதிகள் கர்னல் ஹெரானும் மாபூஸ்கானும் வரி கட்டாத பாளையகாரர்கள் மீது போரை அறிவித்தனர் மாபூஸ்கான் நெற்கட்டான் செவ்வல் பாளையத்துக்காரரான பூலித்வேருடன் போரிட சென்று படுதோல்வி அடைந்தான்.

அதனால் மாபூஸ்கான், கர்னல் ஹெரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்து இருவரும் சேர்ந்து பூலித்வேரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. பல நாட்கள் ஆகியும் போரில் ஆங்கிலேயனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னா பின்னமாக்கியது பூலித்தேவர் படைகள்.அடுத்தடுத்து நடைபெற்ற போர்களிலும் பூலித்தேவருடைய வெற்றி தொடர்ந்தது,1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும்பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும்,கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.

1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போரில் தோற்கடிக்கப்பட்ட பூலித்தேவர் அங்கிருந்து தப்பி சென்றார்

ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச்
செய்து அங்கு கைது செய்யப்பட்டார் எனவும் அங்கிருந்து பளையங்கோட்டை செல்லும் வழியில் சங்கரன் கோவில் ஆலயத்திற்குள் சென்று மறைந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.  அவர் மறைந்ததாக கூறப்படும் அறை இன்று வரை சங்கரநயினார் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார்தலைமையிலும், 1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799-ஆம்ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையிலும்,1801ஆம் ஆண்டு மருது சகோதரர் தலைமையிலும் எதிரொலித்தது.பின்னர் 1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய்க் கலகமாகவும்,1857-ஆண்டு வடநாட்டு சிப்பாய்க்கலகமாகவும்வெடித்தது. 

 

Tags :

Share via