திருவள்ளுவர் கண்ணாடி பாலம்” என்ற பெயரிலேயே அழைக்கப்படும்-அமைச்சர் எ.வ.வேலு தகவல். 

by Editor / 05-05-2025 07:22:39am
திருவள்ளுவர் கண்ணாடி பாலம்” என்ற பெயரிலேயே அழைக்கப்படும்-அமைச்சர் எ.வ.வேலு தகவல். 

கன்னியாகுமரி பகுதியில் தீடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு  தொடர்ந்து கடலில் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை  இரவில் படகில் சென்று ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது:

கன்னியாகுமரி  கண்ணாடி பாலத்தில் இதுவரை 8,42,600 பேர் பார்வையிட்டுள்ளனர் என்றும்,
இந்தப் பாலத்தின் தாங்கும் திறனை முதல்வரின் உத்தரவின் பேரில் ஐஐடி மற்றும் ரைட்ஸ் நிறுவனம் ஆய்வு செய்தது.அதில் பாலம் மிகுந்த உறுதியுடன் 750 பேரை ஒரே நேரத்தில் தாங்கும் திறன் கொண்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த, பாலத்தின் முன்பு கேட் அமைக்கப்படும்.இந்த பாலம் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வலிமை உடையது என தெரிவிக்கப்பட்டது.பாலம் “திருவள்ளுவர் கண்ணாடி பாலம்” என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என இரவு நேரத்தில் ஆய்வில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்தார்.

 

Tags : திருவள்ளுவர் கண்ணாடி பாலம்” என்ற பெயரிலேயே அழைக்கப்படும்-அமைச்சர் எ.வ.வேலு தகவல். 

Share via