தோரணமலையில் தமிழ் வார விழா கொண்டாடப்பட்டது

by Editor / 05-05-2025 07:25:12am
தோரணமலையில் தமிழ் வார விழா கொண்டாடப்பட்டது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இக்கோவிலில் கோடை விடுமுறை தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தி மாணவர்களிடையே விளையாட்டு மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு கடந்த 29. 4.2025 முதல் 05 05 2025 வரை தமிழ் வார விழாவாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதனை ஒட்டி தோரணமலையிலும் கோடை விடுமுறை கொண்டாட்ட  துவக்க நாள் தமிழ் வார விழா நாளாகவும் கொண்டாடப்பட்டது 

தோரணமலை முருகன் கோவிலில் கோடை வார விழா துவக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் சார்ந்த போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்  திருக்குறள் இலக்கியம் புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன் பற்றிய பேச்சு போட்டி மற்றும் அவருடைய கவிதைகள்  முதலியவற்றை திறம்பட ஒப்பித்து காண்பித்தனர் .

தமிழ் வாழ்க என எழுதப்பட்ட வாசகங்களின் முன்பு நின்று மாணவ மாணவியர்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிதல் தேச நலனுக்குக்கு பாடுபடுதல் தீவிரவாதத்தை ஒழித்தல் மற்றும் போதை பழக்கங்களை ஒழித்தல் உள்ளிட்ட கருத்துக்களை உறுதிமொழியாக ஏற்றனர். 


 இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு கடையம் வட்டார கல்வி அலுவலர் குருசாமி பரிசுகளை வழங்கினார் மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் அவர்களுடைய பேரன் முனைவர் பாரதி அவர்கள் காணொளி வாயிலாக தோரணமலை கோயில் நிர்வாகத்திற்கும் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார் 

கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது காலை மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்

 

Tags : தோரணமலையில் தமிழ் வார விழா கொண்டாடப்பட்டது.

Share via