பிரதமருக்கு அபராதம் விதித்த காவல்துறை
காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததற்காக, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு போலீசார் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனர். சுனக்கின் பெயர் குறிப்பிடாமல், லண்டனைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என்ற அடையாளத்துடன், அபராதம் விதிக்கப்படுவதாக லங்காஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்வோருக்கு 100 முதல் 500 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும். வழக்கு நீதிமன்றத்திற்கு வர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
Tags :



















