குறை பிரசவ குழந்தையை கொன்ற தாய்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி விஜயா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் சத்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மாத குழந்தை உள்ளது. இந்த குழந்தை குறை மாதத்தில் பிறந்துள்ளது. இருந்தாலும் ரமேஷ் குழந்தை மீது அதிக பாசம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் ஊர் திருவிழாவின்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு அனைவருடன் சேர்ந்து குழந்தையை தேடுவதுபோல் சத்யா நாடகமாடியுள்ளார். பின்னர் போலீசார் விசாரணையில் குழந்தை மீது கணவர் அதிக பாசம் வைத்துள்ளார். குறை மாதத்தில் பிறந்த குழந்தை ஊனமாகிவிடும் என்பதால் கொலை செய்தேன் என கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
Tags :