அதிமுக பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு -அமைச்சர் K.K.S.S.R ராமச்சந்திரன் தகவல்.

by Editor / 24-12-2021 02:58:15pm
அதிமுக பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு -அமைச்சர்  K.K.S.S.R ராமச்சந்திரன் தகவல்.

பெரியாரின்  48வது நினைவு நாளை முன்னிட்டு தென்காசி அருகே கீழப்பாவூரில் உள்ள பெரியார் முழு உருவச்சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சுரண்டை பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பேராசிரியர். அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு  சுரண்டை - சங்கரன்கோவில் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து பேராசிரியர் மாலை அணிவித்து பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 100  தென்னங்கன்றுகளை வழங்கினார். அதன் பின்னர் பத்தரிக்கையாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் K.K.S.S.R ராமச்சந்திரன் கூறியதாவது : 

மத்திய அரசின் அறிவுரைகள் படி முதல்வர் ஸ்டாலின் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை மருத்துவ அதிகாரிகளோடு கலந்து பேசிய பிறகு அந்த முடிவுக்கு அந்த முடிவின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை துறை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும். அதிமுக-வினரை பழிவாங்கும் நடவடிக்கையில் தி.மு.க ஈடுபடவில்லை.அதிமுக பிரமுகர் கொடுத்த புகாரின் அடைப்படையில்  தான் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவருக்கு பிணை ஆணை கிடைக்கவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பழிவாங்கும் எண்ணம் முதல்வருக்கும்,  தி.மு.க-விற்கும் கிடையாது. தென்காசியை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தல் போன்றே பேரூராட்சி மற்றும் நகராட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அதிமுக பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு -அமைச்சர்  K.K.S.S.R ராமச்சந்திரன் தகவல்.
 

Tags :

Share via

More stories

Logo