போதை ஊசி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

by Staff / 06-08-2023 03:59:10pm
போதை ஊசி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அந்தியூரில் போதை ஊசி வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சில இளைஞர்கள், போதை ஊசியை தனக்குத்தானே செலுத்திக் கொண்டும், மற்ற இளைஞர்களுக்கு செலுத்தி பணம் பெற்று வருவதாகவும் அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைத்து போதை ஊசி வாலிபர்களை போலீசார் ரகசியமாக தேடியும், கண்காணித்தும் வந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி 5 பேரையும், 24ம் தேதி இரண்டு பேர் என, மொத்தம் ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சிந்தகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அந்தியூர் அருகே உள்ள பூனாச்சி பகுதியில், பாலாஜி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் பாலாஜியை கைது செய்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo