கொரோனா  பாதிப்பு: 12 சிறப்பு ரயில்கள் ரத்து

by Editor / 08-05-2021 04:52:38pm
 கொரோனா  பாதிப்பு: 12 சிறப்பு ரயில்கள் ரத்து

 


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் 6 மாதம் வரை கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
தமிழகத்தில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 12 சிறப்பு ரயில்கள் :
சென்னையில் இருந்து கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, நாகர்கோவில் பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையும் ரத்து செய்யபட்டுள்ளது.
அரக்கோணம் - ஜோலார்பேட்டை, மேட்டுபாளையம் - கோயம்புத்தூர், சென்னை எழும்பூர் - புதுச்சேரி உட்பட 9 இணை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களும் ரத்து
நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் (02433/02434) ராஜ்தானி சிறப்பு ரயில்கள் வரும் 12-ம் தேதி முதலும், பிட்ராகுண்டா - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள் (07237/07238) 31-ம் தேதி வரையிலும் ரத்து.
அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் (09220/09219) சிறப்பு ரயில்கள் வரும் 10-ம்தேதி முதலும், காந்திதாம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் (09424/09423) வரும் 13-ம் தேதி முதலும், திருநெல்வேலி - போர்பந்தர் (09262/09261) சிறப்பு ரயில்கள் வரும் 13-ம் தேதி முதலும், திருநெல்வேலி - இந்தூர் (09332/09331) சிறப்பு ரயில்கள் வரும் 11-ம் தேதி முதலும் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து

 

Tags :

Share via