பயங்கரமாக குலுங்கிய கனாஸாவா ரயில் நிலையம்
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கனாஸாவா ரயில் நிலையம் பயங்கரமாக குலுங்கியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடங்கள் குலுங்கியதை அடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஜப்பானின் மேற்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. வஜிமா, இஷிகவா, நிகதா, டோயமா உள்ளிட்ட பகுதிகளில் ஆக்ரோஷமாக அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளன.
Tags :