இளைஞர் போக்சோவில் கைது

by Staff / 19-05-2023 03:52:52pm
இளைஞர் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு பள்ளி மாணவி மருத்துவமனை செல்வதற்காக. குளத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற விருசம்பட்டி கிராமம் வடக்குத்தெருவைச் சேர்ந்த இராமமூர்த்தி என்பவரின் மகன் கருப்பசாமி, மிகுந்த குடிபோதையில் 8-ம் வகுப்பு பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி அருகிலிருந்த வேலிக்காட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். பின்னர் நடந்தவற்றை சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிறுமியிடம் குடிபோதையில் அநாகரிமாக நடந்து கொண்ட கருப்பசாமியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories