ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

by Editor / 28-07-2022 12:28:44pm
ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

இந்துக்களின் முக்கிய தினங்களில் ஆண்டுதோறும் வரும் 3அமாவாசைகளில் ஆடி அமாவாசையம் ஓன்று. இந்த அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து மாவு பிசைந்து பிண்டம் வைத்து எள்ளும், தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். ஆண்டுத்தோறும்  ஆடி அமாவாசையானஅன்று  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுஇடங்களில் ஆடி அமாவாசையையொட்டி திதி தர்ப்பணம் கொடுக்க தமிழ்நாடு அரசு தடைவிதித்திருந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் இல்லாததால் பாபநாசம்,கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் பலியானதால் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளதால் குற்றாலம் மெயினருவிப் பகுதியில் ஆட்கள் நடமாட்டமில்லாமல் இதர நீர்நிலைகாலில் கூட்டம் அலைமோதியது.

இராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலுக்கு உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

 கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்களின் வருகையை ஒட்டி 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் புகழ் பெற்ற திருச்செந்தூர் திருக்கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். எள், அன்னம், தண்ணீர் கொண்டு வேத மந்திரங்களுடன் முன்னோர்களை நினைத்து தர்ப்பனம் கொடுத்தனர்.

நெல்லை,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதலே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நதிகளில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.


 
 

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
 

Tags :

Share via