போக்சோ வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கைது.

by Editor / 09-11-2022 09:07:58pm
போக்சோ வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கைது.

திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே மேலவாளடியில் பள்ளி மாணவிக்கு நேரிலும், செல்போனிலும்  பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் மீது லால்குடி அனைத்து மகளிர் போலீசார் நவம்பர் 6 ம் தேதி போக்சோ வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஒன்றிய செயலாளர் ஜெகதீசனை லால்குடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். போக்சோ வழக்கில் சிக்கிய ஒன்றிய செயலாளரை கட்சியின் பதவியிலிருந்து நீக்கி   மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo