தொடர்விடுமுறை சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் கூட்டம்.

by Editor / 02-10-2022 12:49:31pm
தொடர்விடுமுறை சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் கூட்டம்.

 கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது,குணா குகை,பில்லர் ராக்,பைன் மர சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகினை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் கடந்த 20 நாட்களாக மேற்குத் தொடர்ச்சிமலைப்பகுதியில் மழையில்லாத சூழல் நிலவி வருவதால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி,உள்ளிட்ட அருவிகளில் தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.மேலும் .தொடர்ந்து இன்று முதல் வார விடுமுறை தினம் என்பதாழும்,தொடர்பண்டிகைக்கால விடுமுறை,பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால்  குற்றாலம் மெயினருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.குறைவாகவே கொட்டும் நீரில் கூட்டமலைமோதிவருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo