2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு:

by Editor / 26-01-2022 08:00:48pm
2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு:

2021 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளை, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  வருமாறு:
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப்
பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு
பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது.

அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத், 

மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார், 

பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன், 

சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர், 

சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், 

தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர்.

சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழுக்கும், 

தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன், 

உமறுப்புலவர் விருது - நா. மம்மது, 

கி.ஆ.பெ. விருது முனைவர் - ம. இராசேந்திரன், 

கம்பர் விருது - பாரதி பாஸ்கர், 

ஜி.யு.போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வம், 

மறைமலையடிகள் விருது - சுகி.சிவம், 

இளங்கோவடிகள் விருது - நெல்லைக் கண்ணன், 

அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான
அலாய்சியஸ்.

இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கப்படும்.

Tags : Announcement of Tamil Development Department Awards for the year 2021:

Share via

More stories