சீன அதிபர் ஷி ஜின்பிங்,  மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார்.

by Admin / 24-09-2026 11:30:15am
சீன அதிபர் ஷி ஜின்பிங்,  மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்,  மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார். ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில்  அமெரிக்க  அதிபர் டொனால்ட்  டிரம்ப்  சீன அதிபர் ஷிஜின்பிங் நேரில் வரவேற்றாா்.64 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் அதிபர் ஒருவர் விமான தளத்திற்கே நேரடியாக வந்து வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை வரவேற்பது இதுவே முதல்முறை .இரு வல்லரசுகளும் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.   இரு நாடுகளும் தங்களின் தற்போதைய வர்த்தகப் போர்நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளன. பேச்சுவார்த்தைகளில், செயற்கை நுண்ணறிவு மேலாதிக்கம் குறித்த கடுமையான போட்டி, தீவிரமடைந்து வரும் அமெரிக்க-ஈரான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நாவில்அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் கடுமையான இராணுவ விளைவுகள் ஏற்படும் என்று அதிபர் டிரம்ப்  எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஒருபோதும் மண்டியிடாது என்று   சவால் விடுத்தாா்.  ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள் சவூதி அரேபியா  எரிசக்தி ஆலைகள் மற்றும் தலைநகர் ரியாத் மீது தாக்குதல் நடத்தியதால் ஒரு முக்கிய சவூதி எண்ணெய் குழாய் தற்காலிகமாக மூடப்பட்டது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் நான்கு ஆண்டு கால அமைதி ஒப்பந்தம் சிதைந்துள்ளது. டிக்ரேபடைகள் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எதிராக சமீபத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் டிக்ரே விமான நிலையங்களைக் கைப்பற்றியுள்ளதாக  எத்தியோப்பிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மீது புதிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. ஐ.நா.வில்  உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, உரையாற்றியபொழுது, ரஷ்யாவின் முக்கிய வருவாய் வழிகளைத் துண்டிப்பதற்கு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால் இந்த மோதல் உலகளவில் தொடர்ந்து விரிவடையும் என்று எச்சரித்தார்.

 ஜி 20 உச்சி மாநாட்டில்  அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொள்வது குறித்து மாஸ்கோ தற்போது பரிசீலித்து வருகிறது .

ஓப்பன் ஏஐஏஜென்ட் ஒன்று ,ஆஸ்திரேலிய இணைய போர்ட்டலை ஊடுருவி ஹேக் செய்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிபர் லீ ஜே-மியோங் ராணுவப் போர்க்கப்பல்களை உருவாக்குவதில் இருதரப்பு ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காக அமெரிக்காஅதிபர்  டொனால்ட் டிரம்பை சந்தித்தார் .

 

Tags :

Share via
Logo