கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சடங்குகள் செய்யும் குடும்பத்தினர்

by Staff / 30-12-2023 02:12:09pm
கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சடங்குகள் செய்யும் குடும்பத்தினர்

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க சடங்குகள் செய்து வழிபாடு நடத்தினர். நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். நேற்று அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று 3வது நாள் என்பதால், விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சடங்குகள் செய்தனர்.

 

Tags :

Share via