மீண்டும் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் சற்று முன் பதவியேற்றார். பாட்னாவில் நடைபெற்று வரும் விழாவில், நிதிஷ்குமாருக்கு பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் பதவியை காலை ராஜினாமா செய்த நிலையில், மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார். நிதிஷ்குமாருடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். 23 ஆண்டுகளில் 9வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார்.
Tags :