கவரிங் நகைகளுக்கு நகைக் கடன் வங்கி பெண் ஊழியர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் 2 பேர் கைது.

by Editor / 25-01-2022 11:52:53pm
கவரிங் நகைகளுக்கு நகைக் கடன்  வங்கி பெண் ஊழியர்  உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் 2 பேர் கைது.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி (வயது 58). கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஜெயஸ்ரீ (51). நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் (47), இவர்கள் 3 பேரும் இணைந்து வங்கியின் உறுப்பினர்கள் 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 500 நகை கடன் வழங்கியுள்ளனர்.வங்கியில் தணிக்கை செய்ய வந்த கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி இதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.இதனைத்தொடர்ந்து அவர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸீல்  புகார் செய்தார்.புகாரைத்தொடர்ந்து காஞ்சீபுரம் 
துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1 கோடியே 64 லட்சம் மோசடி நடந்தது  தெரியவந்ததை தொடர்ந்து வங்கியின் செயலாளர் கலைச்செல்வி, நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மோசடியில் தொடர்புடைய வங்கியின் கண்காணிப்பாளரான ஜெயஸ்ரீ தலைமறைவானதை தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags : Three people have been sacked and two others arrested, including a female employee of a jewelery loan bank for covering jewelery.

Share via