. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும்,
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு 2025-26 அறிக்கையில், 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி (GDP) வளர்ச்சி 6.8% முதல் 7.2% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் (2025-26) வளர்ச்சி மதிப்பீடான 7.4% உடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும் .வலுவான உள்நாட்டுத் தேவை, உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன.இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சித் திறன் 6.5%-லிருந்து 7% ஆக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-26 நிதியாண்டிற்கான வளர்ச்சியை 7.3% ஆகக் கணித்துள்ளது. அதே வேளையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) 7% வளர்ச்சியையும், உலக வங்கி 6.7% வளர்ச்சியையும் கணித்துள்ளன. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும், இந்தியா தொடர்ந்து உலகின் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாகத் திகழும் என்று இந்த அறிக்கை நம்பிக்கை தெரிவிக்கிறது.
Tags :



















