காரில் கடத்தப்பட 6 செம்மர கட்டைகள் பறிமுதல்!. வனத்துறை, காவல்துறை கூட்டு விசாரணை.

by Editor / 20-12-2024 07:10:20pm
காரில் கடத்தப்பட 6 செம்மர கட்டைகள் பறிமுதல்!. வனத்துறை, காவல்துறை கூட்டு விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொடுமாப்பள்ளி பகுதியை சேர்ந்த விக்கி என்பவர் காரில் செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில் வனத்துறையினர் பிடிக்க முயன்ற போது காரை விட்டு விக்கி தப்பிச் சென்றுள்ளார். காரில் கடத்தி சென்ற 6 செம்மரக் கட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்து கருப்பனூர் பகுதியில்  அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags : காரில் கடத்தப்பட 6 செம்மர கட்டைகள் பறிமுதல்!. வனத்துறை, காவல்துறை கூட்டு விசாரணை.

Share via