காவல் துறையினரை கண்டித்து கொல்லர் தொழிலாளிகள் போராட்டம்.

by Editor / 20-12-2024 04:21:26pm
காவல் துறையினரை கண்டித்து கொல்லர் தொழிலாளிகள் போராட்டம்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அரிவாள், கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பல தலைமுறைகளாக அரிவாள், சுத்தியல் கத்தி உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வரும் தங்களின் குடும்பங்கள் பெரிதளவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரம் கருதி தங்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கும் காவல்துறையினரை கண்டித்தும் கொல்லர் சமூகத்தின் சார்பில் கண்டன போராட்டமானது இன்று நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் விஸ்வகர்ம சமுதாயத்தின் சார்பிலும்,சுதந்திரபோராட்ட வீரர் முத்துசாமி ஆச்சாரிபேரவை மற்றும்  பசுமை பாரத மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அறுமுகராஜ் தலைமையில் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான தொழிலாளிகள் பங்கேற்று தங்களது வாழ்வாதாரத்தை பறிக்கும் காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகள் தொடர்பாக புகார் அளித்தால் உங்களது கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : காவல் துறையினரை கண்டித்து கொல்லர் தொழிலாளிகள் போராட்டம்.

Share via