புதிய கல்வி கொள்கை.. தமிழக அரசு நாளை வெளியீடு?

by Editor / 07-08-2025 04:55:18pm
புதிய கல்வி கொள்கை.. தமிழக அரசு நாளை வெளியீடு?

தமிழ்நாட்டின் புதிய மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 8) வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 650 பக்கங்களை கொண்ட அறிக்கையை, மாநில கல்விக் கொள்கை குழு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்வரிடம் சமர்ப்பித்தது. இதில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கக்கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைத் தொடர வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via