ஐரோப்பா லீக் கால்பந்து முதல்முறையாக வில்லாரியல் சாம்பியன்

by Editor / 24-07-2021 08:43:55am
ஐரோப்பா லீக் கால்பந்து முதல்முறையாக வில்லாரியல் சாம்பியன்

ஐரோப்பா லீக் தொடரில் இறுதியாட்டத்துக்கு முதல் முறையாக முன்னேறிய வில்லாரியல், பரபரப்பான ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ஐரோப்பியில பிரபலமான கால்பந்து தொடரான 'யுஇஎப்ஏ ஐரோப்பா லீக்' இறுதி ஆட்டம் போலாந்தின் குடான்ஸ்க் நகரில் நேற்று நடந்தது. ஆட்டத்தை காண கணிசமான ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மான்செஸ்டர் யுனைட்டட்(இங்கிலாந்து), வில்லாரியல்(ஸ்பெயின்) அணிகள் மோதின.மான்செஸ்டர் யுனைட்டட் கடந்த 4 ஆண்டுகளாக ஐரோப்பிய அளவிலும், இங்கிலாந்து அளவிலும் எந்தப் பட்டமும் வெல்லவில்லை. அதனால் பட்டம் பெறும் முனைப்பில் தொடக்கம் முதலே யுனைட்டட் அணி வேகம் காட்டியது. ஐரோப்பிய அளவிலான போட்டி ஒன்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வில்லாரியலும் கொஞ்சம் வேகம் காட்டியது.

ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் யுனைட்டட் அணி வீரர்கள் செய்த தவறால் கிடைத்த பொனல்டி வாய்ப்பை ஜெரார்டு மோரினோ அழகான கோலாக மாற்றினார். அதனால் முதல் பாதியில் வில்லாரியல் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதனையடுத்து 2வது பாதியின் 55நிமிடத்தில் யுனைட்டட் வீரர் காவனி எடின்சன் பதில் கோலடித்தார். அதனால் 90நிமிட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அதனால் கூடுதலாக அளிக்கப்பட்ட 30 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே பெனால்டி கோல் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் இரு அணிகளும் தலா 5 வாய்ப்புகளையும் கோல்களாக்கின. அதனால் அதுவும் 5-5 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நின்றது. அதனையடுத்து மீண்டும் கிடைத்த பெனால்டி வாய்ப்புகளிலும் இரு அணிகளும் தலா 5 கோல்கள் அடித்தன. அதனால் மீண்டும் 10-10 என்ற சமநிலை ஏற்பட்டது தொடர்ந்து 'சடன் டெத் கோல்' வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை யுனைட்டட் அணி வீணடிக்க, வில்லாரியல் அந்த வாய்ப்பை அருமையான கோலாக மாற்றியது. அதனால் 11-10 என்ற கோல் கணக்கில் வென்ற வில்லாரியல் முதல்முறையாக ஐரோப்பா லீக் சாம்பியன் கோப்பயை கைப்பற்றியது.

 

Tags :

Share via