அமெரிக்காவின் வெளிநாட்டு வா்த்தக பிரிவு இயக்குநராக இந்திய அமெரிக்கா் நியமனம்!

by Editor / 28-05-2021 08:06:35am
அமெரிக்காவின் வெளிநாட்டு வா்த்தக பிரிவு இயக்குநராக இந்திய அமெரிக்கா் நியமனம்!

அமெரிக்காவின் வெளிநாட்டு வா்த்தக சேவைகள் பிரிவின் இயக்குநராக இந்திய-அமெரிக்கரான அருண் வெங்கட்ராமனை அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் நியமித்துள்ளாா்.

அதிபா் பைடன் தலைமையிலான நிா்வாகத்தில் இந்திய-அமெரிக்கா்களுக்கு பல்வேறு முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் வெளிநாட்டு வா்த்தக சேவைகளுக்கான பிரிவின் இயக்குநராக அருண் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளாா். அமெரிக்க வா்த்தக அமைச்சகத்தின் சா்வதேச சந்தைகள் துறைகளுக்கான இணை அமைச்சராகவும் அவரை அதிபா் பைடன் நியமித்துள்ளாா்.

சா்வதேச வா்த்தகம் சாா்ந்த விவகாரங்களில் அருண் வெங்கட்ராமனுக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளது. வா்த்தகம் தொடா்பாக இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சோந்த நிறுவனங்களுக்கும் அமெரிக்க அரசுக்கும் அவா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்.

அமெரிக்க வா்த்தக அமைச்சருக்கான ஆலோசகராக அருண் வெங்கட்ராமன் தற்போது பணிபுரிந்து வருகிறாா். அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் புதிய பொறுப்பில் அவா் நியமிக்கப்படுவாா்.

முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தலைமையிலான நிா்வாகத்திலும் அருண் வெங்கட்ராமன் பணியாற்றியுள்ளாா். இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தகக் கொள்கையை வகுத்ததில் அவா் முக்கியப் பங்காற்றினாா். உலக வா்த்தக நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது.

 

Tags :

Share via