கடும் குடிநீர் தட்டுப்பாடு: டெல்லியின் பரிதாப நிலை

by Staff / 30-05-2024 05:21:58pm
கடும் குடிநீர் தட்டுப்பாடு: டெல்லியின் பரிதாப நிலை

இந்தியாவில் இந்த வருடம் வெயில் இயல்பை காட்டிலும் 4 முதல் 5 டிகிரி வரை உயர்ந்து இருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் குறைந்துவிட்டது. பருவமழையும் பொய்த்து விட்டதால் மக்கள் குடிநீருக்கே அல்லாடி வருகின்றனர். பெங்களூர் போன்ற நகரங்கள் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் லாரியை பின் தொடர்ந்து ஓடும் காட்சிகள் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

 

Tags :

Share via