ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசுக்கு கத்திக்குத்து

by Staff / 30-05-2024 05:28:26pm
 ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசுக்கு கத்திக்குத்து

தூத்துக்குடியில் தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று காலை மர்ம நபர் புகுந்து ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.அப்போது ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் ஒலித்தது.இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டுறைக்கு தகவல் வந்ததை அடுத்து உடனடியாக அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாரை ஏடிஎம் மையத்துக்கு செல்லுமாறு கூறினார்கள். அதனால் அப்போது பணியில் இருந்த முன்னா உள்ளிட்ட 2 பேர் அந்த ஏடிஎம் மையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்து மர்ம நபர் தப்பி ஓட முயன்றார்.அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் முன்னாவை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு ஓடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த மத்திய பாகம் போலீசார் , சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் புதிய புத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. காயமடைந்த முன்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo