2ஆவது அலை தணிந்தாலும்  கவனம் தேவை  அரசுக்கு  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

by Editor / 20-05-2021 05:05:06pm
2ஆவது அலை தணிந்தாலும்  கவனம் தேவை  அரசுக்கு  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை



 
கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே, ரெம்டெசிவிர் மருந்தும், தடுப்பூசிகளும், ஆக்சிஜனும் ஒதுக்கப்படுகின்றன என தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
தமிழக அரசு தரப்பில் ஆக்சிஜன் தேவை தற்போது சமாளிக்க கூடிய வகையில் உள்ளதாகவும் ஆங்கில மருத்துவம் இல்லாமல் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மருந்து மற்றும் தடுப்பூசி ஆகியவை எதிர்காலத்திற்கான திட்டத்தை குறிப்பிடவில்லை எனக்கூறி, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான அளவில் மருந்து மற்றும் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஒதுக்கீடுகள் குறைவாக உள்ளது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர்.
இரண்டாவது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுகள் செயல்பட வேண்டும் என்றும், மத்திய அரசு ஒதுக்கீடு இல்லாமல் தனியாரிடமிருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர் பின்னர் வழக்கு விசாரணை மே 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

Tags :

Share via