அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து.. 30 பயணிகள் காயம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து வாசுதேவநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த மகளிர் விடியல் பேருந்து கண்டிகைபேரி என்ற ஊரின் அருகே சென்றுகொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க பட்டைக்கட்டு என்று சொல்லப்படுகிற ஜெகப்சரானது திடீரென உடையவே பேருந்து ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள உயர் மின் கம்பத்தில் மோதியது.. இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த நடத்துநர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்படசுமார் 40கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.. காயம்பட்டவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் தாலுகா காவல் ஆய்வாளர் கொடுத்த தகவலின் பேரில் மின்வாரியதுறையினர் விரைந்து வந்து சேதமான மின்கம்ப வயர்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.. இன்று முகூர்த்த நாள் என்பதால் பேருந்தில் பெண் பயணிகள் அதிகபட்சமாக இருந்ததாகவும், இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. விபத்துக்குள்ளான தடம் எண் 35b பேருந்தில் ஏற்கனவே இந்த பட்டை கட்டு பிரச்சனையாக இருந்ததாகவும் அதே பணிமனை அதிகாரிகள் சரிவர கவனிக்காமல் விட்டதாலயே இந்த பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது என அப்ப பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் தற்போது குற்றம் சாட்டுகின்றனர்.. மேலும் படுகாயம் அடைந்தவர்களில் ஐந்து பேர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும் பத்துக்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினை உள்ளிரிலேயே இருந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களை காண செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tags : அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து.. 30 பயணிகள் காயம்.



















