மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு இரண்டு ரூபாய் மானியம்

by Admin / 14-03-2026 02:26:42pm
மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு இரண்டு ரூபாய் மானியம்

மேற்காசிய போர் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையை நீக்கும் பொருட்டு தமிழக அரசு உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை அளித்துள்ளது. இது குறித்து தமிழக மின்சார வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் உணவகங்கள் மின்சார அடுப்புகளை கொள்முதல் செய்ய 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும் என்றும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரை இந்த சலுகை தொடரும் என்றும் இந்த சலுகையானது பெரிய உணவகங்கள் மட்டும் இன்றி டீக்கடைகள் மற்றும் வீடுகளில் உணவு தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories