ஓயாமல் அழுத குழந்தை.. அடித்து கொன்ற தந்தை

by Staff / 01-07-2024 12:12:53pm
ஓயாமல் அழுத குழந்தை.. அடித்து கொன்ற  தந்தை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம் (31). கூரியர் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ரம்யா (21). இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் குழந்தையின் கன்னம் சிவந்த நிலையில் மர்மமாக இருந்துள்ளது. இதுகுறித்து ரம்யா அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரைணயில், குழந்தையின் அழுகை சத்தம் தாங்க முடியாமல் பிரேம் அவ்வப்போது குழந்தையை அடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரம்யா துணி துவைத்துக்கொண்டிருந்தபோது குழந்தை அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்ததில் மூளைக்கு செல்லும் நரம்பு அறுந்து இறந்துள்ளது. இதனையடுத்து பிரேமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories