மீண்டும் பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. பொதுக்குழுவில், பொதுச் செயலாளர், தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். தலைவராக சி.கோபாலன், துணை தலைவராக அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
Tags :