மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது ?

by Editor / 12-09-2021 04:47:56pm
மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது ?

மாரடைப்பால் தினமும் பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்த மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? கடந்த 2 வருடத்தில் இளைஞர்களுக்கு அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு காரணம் புகைபிடித்தல் பழக்கமும், மன அழுத்தமும் தான் என கூறப்படுகிறது.

மேலும், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. நமது இதயத்தில் இருந்து இரத்தம் சரியான நேரத்தில் ஆக்ஸிஜனை உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும் பணியில் ஏதேனும் தளர்வுகள் ஏற்படும் பொழுது, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதன் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் செயல் இழக்க ஆரம்பிப்பது மட்டுமல்லாமல், மாரடைப்பு ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்து விடும்.

இது போல இதயத்திலிருந்து ஆக்ஸிஜன் செல்லக் கூடிய பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்படும் பட்சத்தில், சட்டென்று ஒருவருக்கு மாரடைப்பு உண்டாகி உயிர் இழப்பை ஏற்படுத்திவிடும். மாரடைப்பிற்கான முக்கியமான அறிகுறி மார்பு பகுதியில் ஏற்படக்கூடிய அழுத்தம் மற்றும் வலி உணர்வு தான். அதிக அளவிலான நெஞ்சு வலியை உணரும் பட்சத்தில், அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதே போல இந்த வலி நமது கை, கழுத்து, முதுகு ஆகியவற்றிலும் பரவ தொடங்கும். இவ்வாறு அறிகுறிகள் தென்படும் பொழுது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இவை சில நிமிடங்களிலேயே மாரடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை உருவாக்கிவிடும்.மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பதாக சில நாட்களுக்கு உடலில் மிக அதிக அளவில் சோர்வு இருக்கும். நன்றாக தூங்கி எழுந்து அமர்ந்து இருக்கும் பொழுது கூட ஒரு புத்துணர்ச்சி இல்லாமல், உடல் சோர்ந்த நிலையிலேயே காணப்படும். இதுவும் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஒரு அறிகுறி. ஏனென்றால் இதயம் சரியாக வேலை செய்யாத பட்சத்தில், நமது உடல் உள்ளுறுப்புகள் மிகக் கடினமான வேலையை செய்து சோர்வாகி விடும். 

 

Tags :

Share via