மாநில தலைவர் டி. கே சிவகுமாரின் பிறந்தநாள் பரிசாக அவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படுமா ?

by Admin / 15-05-2023 09:48:29am
மாநில தலைவர் டி. கே சிவகுமாரின் பிறந்தநாள் பரிசாக அவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படுமா ?

கர்நாடக சட்ட பேரவை தேர்தல் முடிவு காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது 136 சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வெகு விரைவில் அமைய உள்ளது  .இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினுடைய கர்நாடக முதலமைச்சராக யார் வரப்போகிறார்கள் என்கிற கேள்விதான் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முன்னாள்  முதலமைச்சர்  சித்த ராமையாவிற்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளிக்கப்படுமா இல்லை... காங்கிரஸ் கட்சியினுடைய மாநில தலைவர் டி. கே சிவகுமாரின்பிறந்தநாள் பரிசாக அவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படுமா என்கிற கேள்விகள் தான் எழுந்து கொண்டிருக்கின்றன.  வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு  முழு அதிகாரத்தை தந்து விட்ட காரணத்தினால், காங்கிரஸ் தலைமை கைகாட்டும்  ஒருவர் தான் முதலமைச்சராக பொறுப்பேற்பார் .அந்த ஒருவர் யார் என்பதுதான் இப்பொழுது, கர்நாடகத்தின் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் நிற்கும் கேள்வி.

 

Tags :

Share via