கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்த மாணவனுக்கு கட்டணம் செலுத்திய முதலமைச்சர்

தனியார் கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் அரசு கல்லூரியில் இடம் கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுத்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேர்ந்த மாணவர் நவீன்குமார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கல்வி கட்டணம் செலுத்தி உள்ளார். கடந்த ஞாயிறு அன்று அந்த மாணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் அவரது பெற்றோரிடம் பேசி நலம் விசாரித்தார். மாணவரியின் பெற்றோர் நோய்வாய்ப்பட்டு இருப்பதை அறிந்துகொண்ட முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை விடுத்தபடி மளிகைகடை வைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். முதல்வரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உதவியது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Tags :