முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார்.
புதுச்சேரி முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியாவால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி, பதவிகளில் இருந்த கண்ணன், நவம்பர் 5-ம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த சூழலில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூலையில், பாஜகவில் இருந்து கண்ணன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Tags : முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார்.