பதவிக்காக 45 வயதில் காங்., பிரமுகர் திருமணம்
உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில், பதவிக்காக, 45 வயது நபர் ஒருவர், திருமணத்துக்கு தயாராகியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான மமூன் ஷா கான் (45), திருமணமாகவில்லை. இவர், ராம்பூர் நகராட்சித் தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், நகராட்சி தலைவர் பதவியை பெண்களுக்காக அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் மமூன் ஷா கான் உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தனது மனைவியை தலைவர் பதவிக்கான போட்டியில் நிறுத்த முடிவு செய்துள்ளார். இன்று அவர்களின் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்திற்கு 2 நாட்களில் மணமகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :