இன்று பிரதோசம்
சிவனுக்குரிய வழிபாடுகளில் மிக முக்கியமான ஒரு வழிபாடு பிரதோஷ வழிபாடு ஆகும். . மூவுலக பேரழிவை காக்கும் பொருட்டு தேவர்களுக்காக ஆலகால விஷத்தை அருந்தி ...எல்லா உயிர்களையும் காத்த சிவ பெருமானை வழிபடக்கூடிய இந்த பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் தேய்பிறை பிரதோஷம் என மாதத்தில் இரண்டு முறை வருகிறது. இவ் வழிபாடு ஒவ்வொரு மாதமும் 13திரியோதசி திதியில் சூரிய மறைவிற்கு முன் மூன்றே முக்கால் நாழிகை மறைந்ததற்கு அப்பால் மூன்றே முக்கால் நாழிகை ஆக ஏழரை நாழிகைக்கு உட்பட்ட காலம்தான் பிரதோஷ காலம் எனப்படும் நாலு முப்பது மணி முதல் ஏழு மணி வரை. இந்த பிரதோஷங்களில் மிக முக்கியமான பிரதோஷம் சனிக்கிழமையில் வருவது தான்.
அடுத்த பிரதோஷம் 15 10 2024 செவ்வாய்க்கிழமை வளர்பிறை காலம்.
Tags :