பணம் தேடலில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இயற்கையான உடல் தேவைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

by Admin / 30-09-2024 01:18:34pm
பணம் தேடலில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இயற்கையான உடல் தேவைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. விதவிதமான பொருள்களின் பயன்பாடு -அறிவியல் வளர்ச்சியால் கிடைக்கப் பெற்ற, நவீன சாதனங்களில் வழியான இன்பங்களும் ...மனிதர்களை செயற்கையான சந்தோசங்களை அடைவதற்கு நகர்த்திக் கொண்டிருக்கின்றன..

பணம் தேடலில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இயற்கையான உடல் தேவைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ,வெளியே சொல்ல முடியாமல் புழுங்கி கொண்டிருக்கும் மனிதர்கள்... தம் தேவைகளை தீர்த்துக் கொள்ளும் முகமாக... சமூக நெறிமுறைகளை மீறி,.. சில குற்றச் செயல்களை புரிவதற்கு, இந்த உணர்ச்சி தூண்டல்கள் அதன் வழிகாட்டல்கள் இவர்களை ஆபத்தான நிலைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் நிலையை நாம் அவதானிக்க முடிகிறது..

அதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளும் அப்பாவியான இளம் உயிர்களும் பலியிடப்படுகின்றன.

விரிந்து கிடக்கும் உலகச் சந்தையில் பணம் இருந்தால் எதையும் வாங்கிக்கொண்டு தற்காலிக சந்தோஷத்தை பெற முடியும் என்கிற நிலை உருவாகியதன் காரணமாக மனித மனம் தன் அபிலாசைகளை தன் ஆசைகளை வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை தீர்த்துக் கொள்ளும் முகமாக செயற்கை உபகரணங்களை நோக்கி போகின்ற நிலையும்... இயற்கைக்கு முரணாக இருக்கின்ற நிலைப்பாட்டை நோக்கி போவதற்கான சூழல்களும் உருவாகி உள்ளது. வர்த்தக மயமாகி போன உலகம். தேவைகள் அதிகரித்து போய் எதை நோக்கி செல்கிறோம் என்பதை மறந்து... எது நமக்கு கிடைக்குமோ.. அதை அருகிலேயே இருக்கின்றதை எல்லாம் விட்டு விட்டு.. எங்கெங்கோ சென்று கொண்டு ..தன் வாழ்வியலை சிக்கலுக்கு உரியதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

. உடல் தேவைகள் என்பது ஒவ்வொருத்தருக்குள்ளும் நெருப்பாக கனன்று கொண்டு தான் இருக்கின்றது .அந்த நெருப்பை அணைப்பதற்கான சூழல்கள்.. குடும்பத்திற்குள் இருக்கிற பொழுது அவர்கள் தங்களுடைய இயல்பான வாழ்வியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது கிடைக்காமல் ,அந்த ஆசைகள் அரும்புகின்ற வயதில் இருக்கக்கூடியவர்களும்.. இல்லை, இந்த ஆசைகளை நெஞ்சுக்குள்ளே பொத்தி.. பொத்தி வைத்துக்கொண்டு வயதானவர்களும் சில நெறிமுறைகளை மீறுகின்ற போக்கு அதிகரித்து வருகின்றன. இவைகள் சமூகத்திற்கு ஒரு பெரிய சவாலாக இருந்து ஒட்டுமொத்த பண்பாட்டை சிதைக்கும் விதமாக உருவெடுக்கின்றன. இதை ஒரு பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் இல்லை என்று யாரும் அப்படி கடந்து சென்றுவிட முடியாது .இணையதளங்களில் ஆயிரக்கணக்கான நல்ல விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்ற பொழுது... மனிதன் அதில் தீமையானவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதன் வழியாக பயணப்படுகின்ற பொழுது அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

உலகம் மிக மிகப் பரந்து போய்விட்டது .யாரும் யாரையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற நிலை இல்லை, யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியாத ஒரு சூழல் .ஒரு நிர்ப்பந்தமான ஒரு வாழ்க்கைச் சூழலில் தான் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில், அவர்கள் எந்த தேவையை நோக்கி ஓடுகிறார்களோ அதனுடைய பலாபலன்களை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் தேடுதலுக்காகவும் புகழ் தேடுதலுக்காகவும் பதவி தேடுதல்களுக்காகவும் செல்லக்கூடியவர்கள் அது வேறு மாதிரியான ஒரு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். வெறும் உடல் சார்ந்த இச்சைகள் சார்ந்த எண்ணங்களுக்கு ஆட்படுகிறவர்கள், அதை நோக்கி பயணப்படுகிற பொழுது... ஏதோ ஒரு தீமை இயல்பாக அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இல்லை,.. ஏற்படக்கூடிய காரணத்திற்கு அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்..

சமூகம் என்னதான் வேகமாக வளர்ந்து வந்திருந்தாலும்... மனிதனுடைய உணர்ச்சிகளும் உணர்வுகளும் இன்றும் காலம் காலமாக அப்படித்தான் இருக்கிறது .இருக்கும்.. அதனால், எந்த ஒன்றையும் எவ்வாறு வெளிப்படுத்த முடியும்: வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு அதை நோக்கிய.. தன்னுடைய கால்களை எடுத்து வைத்தால், நமக்கும் எந்த தீமையும் வராது. மற்றவர்களுக்கும் எந்த கெடுதல்களும் வராது.

சக மனிதனை அழித்துத்தான் நம்மளுடைய சந்தோசங்கள் இருக்கிறது என்றால் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வது அர்த்தமற்றதாகும்..

கொட்டிக் கிடக்கின்ற இந்த உலகத்தில் நமக்கானதை தேர்ந்தெடுக்கும் பொழுது.. மற்றவர்களை பாதிக்காமல் இருக்கக்கூடிய தாக நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு... நம்முடைய பயணத்தை இன்பமானதாக- வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு தேவைகளுக்கும் விலங்குகளை போல் வேட்டையாடி ஒரு உயிரை அழித்து சாப்பிட வேண்டிய நிலை. மனிதர்களுக்கு இல்லை. அதனால், எல்லாவற்றையும் யோசித்து சிந்தித்து அதன்படி நடப்பதற்கான நிகழ்வுகளை உருவாக்கிக் கொள்வது தான் மனித சமூக வளர்ச்சிக்கு ஒர் இலக்கணமாக அமையும்.

 

Tags :

Share via