5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோம்ரா ஓரான் (வயது 20). இவர் நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த மஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கடந்த ஆண்டு பணியாற்றி வந்தார். இதேபோல் இவருடன் எஸ்டேட்டில் பணியாற்றும் வட மாநிலத்தை சேர்ந்த பலரும் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 11-11-2023 அனறு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ள வட மாநில கூலி தொழிலாளி தம்பதியின் 5 வயது மகளை, சோம்ரா ஓரான் ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள புல்வெளி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது, மேலும் இது குறித்து வெளியில் கூறக்கூடாது என்று சிறுமியை அவர் மிரட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், மேலும் இதுகுறித்து மஞ்சூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் உதகை மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தில் புகார் பதியப்பட்டு சோம்ரா ஓரான் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (வெள்ளிக் கிழமை)
நீதிபதி லிங்கம் தீர்ப்பளித்தார்.அதில் சோம்ரா ஓரானுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்பு வழங்கினார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். இதன் பின்னர் சோம்ரா ஓரான் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மொழிப்பிரச்சினைக்கு மத்தியில் 10 மாதத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை