தந்தை பெரியார் இல்லையே என ஏங்கினேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Staff / 08-03-2023 01:37:02pm
தந்தை பெரியார் இல்லையே என ஏங்கினேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்வில் சாதனை பெண்களுக்கு பாராட்டு தெரிவித்த புத்தகங்களை முதலமைச்சர் பரிசளித்தார். நிழச்சியில் பேசிய அவர், சமூகத்தின் உயர்நிலைகளில் பெண்கள் நிறைந்திருப்பதைக் காண தந்தை பெரியார் இல்லையே என ஏங்கினேன். திராவிட இயக்கம் இம்மண்ணில் விதைத்துள்ள சிந்தனை மாற்றத்தை மகளிர் தின விழாக்கள் வலிமைப்படுத்தட்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா ராஜன், கல்லூரி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via

More stories