விநாயகர் சதுர்த்தியையொட்டி   மலர்ச்சந்தையில் பூக்கள் விலை இருமடங்கு உயர்வு ஒரு கிலோ மல்லிகை பூ 1000 ரூபாய்க்கு விற்பனை.

by Editor / 06-09-2024 01:32:20pm
விநாயகர் சதுர்த்தியையொட்டி   மலர்ச்சந்தையில் பூக்கள் விலை இருமடங்கு உயர்வு ஒரு கிலோ மல்லிகை பூ 1000 ரூபாய்க்கு விற்பனை.

 தமிழகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக மதுரை மல்லிகைப் பூ நேற்று முன்தினம் 600 முதல் 700ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ 1000முதல் 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல நேற்று முன்தினம் முல்லை 600 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 1000 ரூபாய்க்கும் 500ரூபாய்க்கு விற்ற பிச்சி பூ 800ரூபாய்க்கும், 800ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் பூ 1000 ரூபாய்க்கும், 200ரூபாய்க்கு விற்பனையான அரளிப்பூ 300ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 300ரூபாய்க்கும், 150ரூபாய்க்கு விற்பனையான பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும்,  100 ரூபாய்க்கு விற்பனையான பன்னீர் ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன

விநாயகர் சதுர்த்தி, வளர்பிறை மூகூர்த்தத்தையொட்டி இன்னும் இருதினங்களுக்கு பூக்கள் விலை உயர்ந்தே இருக்கும் என பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

Tags : விநாயகர் சதுர்த்தியையொட்டி   மலர்ச்சந்தையில் பூக்கள் விலை இருமடங்கு உயர்வு ஒரு கிலோ மல்லிகை பூ 1000 ரூபாய்க்கு விற்பனை

Share via

More stories

Logo