திரையரங்குகள் டிக்கெட் கட்டணம் உயர்வா? - திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம்

by Editor / 23-08-2021 09:48:49am
திரையரங்குகள் டிக்கெட் கட்டணம் உயர்வா? - திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம்

தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின்படி, இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், பார்வையாளர்களை முகக் கவசத்துடன் அனுமதிப்பது, ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர வைப்பது, கிருமி நாசினியால் சுத்தம் செய்வது போன்ற அனைத்து ஏற்பாடுகளுடனும் இன்று முதல் செயல்படத் தொடங்குகின்றன.

இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில், ''திரையரங்கு கட்டணங்கள் எக்காரணம் கொண்டும் உயர்த்தப்படமாட்டாது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திலேயே திரைப்படங்கள் வழக்கம்போல திரையிடப்படும். இன்று ஒரு சில சிங்கிள் ஸ்க்ரீன் திரையரங்குகளும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே திறக்கப்படுகின்றன. மற்ற திரையரங்குகள் வியாழக்கிழமை அன்று திறக்கப்படும்'' என்று கூறினார்.

 

Tags :

Share via