அண்டை நாடுகளின் உணவு உதவிகளை இந்தியா பூர்த்திசெய்யும் முரளிதரன்

by Staff / 20-05-2022 12:05:29pm
அண்டை நாடுகளின் உணவு உதவிகளை இந்தியா பூர்த்திசெய்யும் முரளிதரன்

 உலக சந்தையில் கோதுமையின் விலை அதிகரித்த போது உணவு பாதுகாப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  அண்டை நாடுகளின் உணவுகடுமையான நேரங்களில் உணவு பாதுகாப்பு இந்தியா உதவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் தலைமையில் ஐநா பாதுகாப்பு சபையில் மோதல்கள் மற்றும் உணவு பாதுகாப்பு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் போர் காரணமாகவும் விலை உயர்வு காரணமாக சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்ட இந்தியா போன்ற நாடுகளில் போதிய அளவு கோதுமை கையிருப்பு உள்ள நிலையிலும் விலை உயர்வுக்கு அதிகரிப்பது இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உணவு பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாக முரளிதரன் தெரிவித்தார். தனது தேவைகளுக்காகவும் தனது அண்டை நாடுகளின் பாதுகாப்புக்காகவும் இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு தடை போன்ற நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். உணவுக்கான தேவை உள்ள அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு தேவையான கோதுமையை அளிக்கமுடியும் என்று முரளிதரன் விவாதத்தில் எடுத்துரைத்தார்.கோரோனோ பேரிடர் காலத்திலும் அதன் பின்னர் பின்னரும் இந்தியா ஆப்கானிஸ்தான் மியான்மர் இலங்கை போன்ற நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்து உள்ளதாகவும் அமைச்சர் தனது பேச்சில் குறிப்பிட்டார். உலக சந்தையில் கோதுமையின் விலை அதிகரித்த போதும் உணவு பாதுகாப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

 

Tags :

Share via