நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்

கிருஷ்ணகிரி: புதூர் கிராமத்தை சேர்ந்த பாப்பம்மா (45) நேற்று ஏப்.23 ஆடுகளை மேய்க்க காட்டுக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், பெரியஏரி காட்டுப்பகுதியில் இன்று காலை பாப்பம்மா ஆடை இல்லாமல் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :