குப்பை தொட்டியில் அழுகிய நிலையில் குழந்தை உடல் மீட்பு

சென்னை: கொளத்தூர் ராஜமங்கலத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைட்டி உடையில் ஆண் குழந்தையின் உடலை சுற்றி குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார், குழந்தை கொலை செய்யப்பட்டு குப்பை தொட்டியில் வீசப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :