தருமபுரி மாவட்டத்தில் பல்வேறுத்திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

by Staff / 17-08-2025 10:50:02am
 தருமபுரி மாவட்டத்தில் பல்வேறுத்திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் நடைபெற்று வரும் அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின்கலந்துகொண்டு  ரூ.512.52 கோடி மதிப்பில் 1044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், ரூ.362.77 கோடியில் முடிவுற்ற 1073 திட்டப் பணிகளை அர்பணித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க ஒகேனக்கல் உள்ள தருமபுரி மாவட்டத்தில் ரூ.512.52 கோடி மதிப்பில் 1044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், ரூ.362.77 கோடியில் முடிவுற்ற 1073 திட்டப் பணிகளை வழங்கி உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 

இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், வேங்கையின் மைந்தன், இப்பொழுது அவர் வேளாண் மைந்தனானார். அரசின் திட்டங்களை நன்றாக செயல்படுத்தி வருகிறார். 

இந்தியாவிலே முதல் முறையாக வேளாண் திட்டத்தில், நேரடியாக கடன் பெறும் நடை முறையை மாற்றி, இணைய வழியில் பயிர் கடன் பெறுதல், திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1928 கோடி ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் வழங்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டம் ரூ.7200 கோடி மதிப்பில் தொடங்கப்படுகிறது. 

திமுக ஆட்சியில் பெரும்பாலை அகழாய்வு, ஏரியூரில் அரசு கலைக் கல்லூரி, ஒகேனக்கல் சுற்றுலா மேம்பாடு செய்தல், வத்தல் மலைக்கு முதன் முதலாக பேருந்து வசதி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வழங்கியிருக்கிறோம்.

இன்று தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நிழல் கோரிக்கையான சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டது. இதில் இணைய தளம் மூலம் 200 ஏக்கர் நிலம் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, 7 தொழில்  நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்படுகிறது.

கடந்த 2021 தேர்தலில் கொடுத்த அறிக்கையை பார்த்து எதிர்க்கட்சிகள் சாத்தியமில்லை என்று சொன்னார்கள். ஆனால் முதல் நாளே விடியல் பயணத்திற்காக கையெழுத்து போட்ட கைதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இதை கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் செயல்படுத்தம்பட்டுள்ளது. இந்தியாவிலே தமிழ்நாடு திசைக்காட்டி. எதிர்க் கட்சி சொல்வதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது அவர்களின் அரசியல். அதைவிட மலிவான அரசியல் செய்கிறார். ஆளுநர் ரவி. தமிழ்நாட்டு மாணவர்களை இழிவுப்படுத்துவார். இல்லாத திருக்குறளை சொல்லுவார். இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் என்று ஒன்றிய பாஜக அரசின் புள்ளி விவரம் சொல்கிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் அவதூறை பரப்புகிறார். பெண்களில் பாதுகாப்பில்லை என ஆளுநர் சொல்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் கம்பு சுத்த வேண்டும்‌. அது தமிழ்நாட்டில் இல்லை. ஆளுநர் இங்கேயே இருக்க வேண்டும். நமக்குள்ள மொழிப்பற்றை, இனப்பற்றை காப்பாற்ற, இறுகப்பிடிக்க ஆளுநர் இருக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின், தாயுமானவன் திட்டத்தை பற்றி நான் சொல்ல தேவையில்லை. அதற்கு நீங்களே தூதுவராக இருக்கிறீர்கள். 

தாயுமானவர் திட்டத்தில் முதியவர், மிள்ளுத்திறனாளிகள் குடும்பத்தை தேடி, 21 இலட்சம் குடும்பத்தினருக்கு ரேசன் பொருளை வழங்குகிறது. வீட்டுக்கே பொருள் கோடுப்பதால், முதியோர்கள் நா தொழுது பேட்டி கொடுக்கிறார்கள். நானும் அதேத்தான். நான் முதல்வரானதே இதற்கு தான் இதை கண்டு நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தான் என்று தெரிவித்தார்.

சிதாதேரி ஊராட்சி, கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் இருந்து, அரூர் வட்டத்தில் இணைப்பு.

ஒகேனக்கல் -தருமபுரி சாலை 162 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை யாக இரண்டு கட்டமாக அமைக்கப்படும்.
நல்லம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி 7.50 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம்.
தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம்.
அரூர் பகுதியில் வள்ளிமதுரை அணையிலிருந்து, ரூ.15 கோடி மதிப்பில் மேல்நிலைப் நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்படும்.
* சித்தேரி ஊராட்சி 63 மலைக்கிராமங்கள் அரூர் வருவாய் வட்டத்தில் இணைக்கப்படும்
* ஒகேனக்கல் மாவட்ட நெடுஞ்சாலையில் 25 கிமீ நான்கு வழித்தடமாக மாற்றப்படும்
* நல்லம்பள்ளி ஊராட்சியில் மலைச்சாலை ரூ.10 கோடி சாலை தார் சாலையாக அமைக்கப்படும்
* நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டப்படும்
* புளி உற்பத்தி செய்யும் ரூ.11 கோடி செலவில் புளி வணிக மையம் அமைக்கப்படும்
* அரூர் நகராட்சி மக்களுக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
 

 

Tags :  தருமபுரி மாவட்டத்தில் பல்வேறுத்திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Share via